Saturday, July 14, 2012

கவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - No to 24x7 Bar


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை  படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை!

இனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

குடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!

வெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.


2 comments:

ILA (a) இளா said...

11 வது படிக்கிற பொண்ணு அதாவது 16-17 வயசுப் பொண்ணை மதுவருந்தும் இடத்துல அனுமதிச்சது முதல் குற்றமில்லீங்களா? அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் சுய அறிவு வேணாமா?

பசங்களை கல்லால அடிக்கனும், அதே சமயம் பெண்ணும் கண்டனத்துக்குரியவரே

Anonymous said...

ஒரு இளம்பெண் அதுவும் நடுஇரவில் பாரில் சென்று அங்கேயே கலாட்ட செய்துவிட்டு தனியாக வெளியே வரலாமா ? இது முதல் தவறு. அதை பற்றி இந்த மீடியாவும் மற்றும் பெண்ணியவாதிகள் வாயிதிரக்கவில்லை. மேலும் குடித்துவிட்டு ஒரு பெண்ணை வம்பு செய்யும் குடிகார நாய்களை நிக்கவச்சு காயியடிக்கவேண்டும்.

மஹாராசா