Saturday, November 26, 2011

ஒரு லிட்டர் சன் லைட்

அரசு கேபிள் வழியாக ஜெயா டிவியில் விலைவாசி ஏற்றத்தை அறிவித்துவிட்டு ஜெயலலிதா ஹெலிகாப்டர் ஏறி பெங்களுரு பறந்துவிட்டார். அவருக்கு அவர் பிரச்சனை.

ஆனால் தமிழகம் முழுவதும் விலைவாசி மற்றும் மின்சாரம் காரணமாக அணுஉலை முதல் அடுக்களை வரை செம ஹாட். இப்படி விலை ஏற்றினால் நாங்க எப்படி வாழறது என்று டாஸ்மாக் தமிழன் முதல் ஐபேட் தமிழன் வரை புலம்ப ஆரம்பிச்சாச்சு.

நேற்று கூட பெங்களுரில் இருந்து ஹெலிபேடில் இறங்கிய கையோடு, தமிழக முதல்வர் மின்கட்டணத்தையும் கன்னா பின்னாவென்று உயர்த்திவிட்டார்.

அரசு எப்பவுமே அப்படித்தான். கஜானா காலி என்ற அறிக்கையுடன் ஓடி மறைந்துவிடும். மக்கள் முதலில் புலம்புவார்கள் பின்னர் அதுவே பழகிப்போய்விடும். இது சாதாரண மக்களின் நிலை. சில அசாதாரணர்கள் இருக்கிறார்கள். கையில் கிடைப்பதை வைத்து தங்களுக்கு வேண்டியதை உருவாக்கிக் கொள்வார்கள்.

கென்யாவில் வாழும் சேரி மக்கள் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு 60 வாட்ஸ் பல்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அணு உலை கிடையாது, சோலார் பேனல் கிடையாது, அனல் மின் அலட்டல்கள் கிடையாது. ஒரே ஒரு இரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர், கொஞ்சம் ப்ளீச்.... அவ்வளவுதான் 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.

குடிசைகளின் கூரை வழியாக நீர் நிரப்பப்பட்ட பாட்டில் தொங்கவிடப் படுகிறது. பாதி பாட்டில் கூரைக்கு மேல், மீதி கூரைக்கு உள்ளே, அதாவது வீட்டுக்கு உள்ளே. கூரைக்கு மேல் உள்ள பாட்டில் வழியாக சூரிய ஒளி உள்ளே இறங்குகிறது. அது ஒளிச் சிதறல் காரணமாக உள்ளே இறங்கியதும் வீடு முழுவதும் சிதறுகிறது. சிதறலை அதிகரிக்க, தண்ணீரில் கரைக்கப்பட்ட ப்ளீச் உதவுகிறது. வெளிச்சத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்ட, நைலான் துணிகள் (சினிமாவில் ரிஃப்ளடக்டர்கள்) போல பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிம்பிள் செட்டப் வழியாக அந்த பாட்டிலில் 50 முதல் 60 வாட்ஸ் பல்பை போல வெளிச்சம் பெற முடிகிறது. பைசா செலவில்லை, ஷாக் இல்லை, மின்சாரமும் இல்லை, மின்கட்டண மிரட்டலும் இல்லை. ஆனால் அறை முழுக்க வெளிச்சம்.

இரவு நேரத்தில் என்ன செய்வது? பௌர்ணமி காலங்களில் பிரச்சனை இல்லை. மற்றபடி விடியும் வரை காத்திருதான்.

தண்ணீர் பாட்டில் பல்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரின் பெயர் மோஸர். 2002ல் பிரேசில் சேரிகளில்  இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தற்போது Koch Hope என்ற இளைஞர் பட்டாளம் கென்யாவின் இருண்ட சேரிகளில் 100 வீடுகளில் இதை இலவசமாக செய்து தந்திருக்கிறார்கள். மேலும் விரிவுபடுத்த டோனர்களுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய திட்டத்திற்குப் பெயர் 'Isang Litrong Liwanag' தமிழல் கூறினால் ஒரு லிட்டர் சன்லைட்‘

சன்லைட் என்ற வார்த்தை தமிழா என்று என் காதை திருகாதீர்கள். ச்ச்ச்சும்மா ஒரு ஸ்டைலுக்காக எழுதினேன். நம்ம ஊர்லயும் இதை யாராவது கொண்டு வாங்கப்பா... அம்மா கரண்ட் சார்ஜையும் ஏத்திட்டாங்களாம்.

இதை வாசித்த பின் க.பாலாஜி -ஒரு யுடியூப் வீடியோ இணைப்பு தந்திருந்தார். அதையும் இந்தப் பதிவில் சேர்த்துக் கொண்டுள்ளேன்

3 comments:

kanmaniappa.blogspot said...

அம்மா..... அம்மா.......அம்மம்மா..
கொஞ்சம் கருணை காட்டம்மா....
விலையேற்றத்தின் உச்சம்......
ஜெயா டிவியும்.... இனி கட்டணச்சேனலாகிறது..... அரசு கேபிள் மூலம்.... எவ்வளவு வரும்.... இந்தாப்பா பன்னீரு கணக்கு போடு ......!

க.பாலாசி said...

நல்ல பகிர்வு.. இதற்கான செய்முறை விளக்க காணொளி கூட சமீபத்தில் முகப்புத்தகத்தில் கிடைத்தது.. கிடைத்தால் அதையும் பகிருங்களேன்..

க.பாலாசி said...

உங்களின் பார்வைக்கு.. http://www.youtube.com/watch?v=JOl4vwhwkW8&sns=fb