Tuesday, July 19, 2011

மு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா? எது முக்கியம்? தீர்மானியுங்கள்.


சமச்சீர் கல்வி விவகாரத்தை இரு கழகங்களுக்கான சண்டை என்ற மனோபாவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை. 

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் வக்காலத்து வாங்கி வீணாகப் போனது போதும். இது அரசியல் பிரச்சனை அல்ல. அடிப்படைக் கல்வி பிரச்சனை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அரசியல் வர்க்கத்தை நாம் சீற்றத்துடன் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது அருமையான குழந்தைகளை இதைவிடக் கொடுமையாக கேவலப்படுத்த முடியாது. அவர்களுக்கு பள்ளி உண்டு. ஆனால் கல்வி இல்லை. வேறு எந்த நாட்டிலாவது இது போலக் குளறுபடி உண்டா?

நமது குழந்தைகள் பாடம் படித்து 2 மாதங்களாகிவிட்டன. உலக வரலாற்றிலேயே கல்வி விஷயத்தில் இந்த அளவுக்கு பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்ட அரசு எதுமே இல்லை.
எங்கள் குழந்தைகளுக்கு ஏன் கல்வியை மறுக்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை ஒரே குரலில் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும். நல்லதோர் வீணையாக இருக்கும் நம் குழந்தைகள் புழுதியில் எறியப்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும்.

5 comments:

Pandian R said...

பாடம் இல்லாத பள்ளி - இன்று வெற்றிகரமான 50 ஆவது நாள்.

R.Gopi said...

//"மு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா? எது முக்கியம்? தீர்மானியுங்கள்."//

ஆஹா... தலைப்பே பத்திட்டு எரியுதே. ஆமாம், கல்வியை பற்றி பேசும் போது மு.க.விற்கு என்ன ஆதரவு? மு.க.என்ன சொம்பு எடுத்துட்டு வந்து பஞ்சாயத்து பண்ணப்போறாரா?

//அரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும்.//

ஆஹா... இது டீல்... இந்த பதிவின் சாராம்சமே இந்த வரிகள் தான்... இதை மு.க.கூட தைரியமாக சொல்லவில்லை...

ஐ லைக் இட்...

Anonymous said...

முக வுக்கு அதரவு என்று இல்லை, ஜே க்கு ஆதரவும் இல்லை. மொத்தத்தில் சமச்சீர் கல்வி என்பது ஒரு குப்பைக்கு சமம.. மத்திய அரசாங்கத்தின் ncert பாடத்திட்டம் அருமையானது.. தேசியாளவில் எந்த நுழைவுத்தேர்வு எழதுவதர்க்கும் எளிதாக இருக்கும்... மிகவும் தரம் வாய்ந்தது.. என்பதில் துளியும் சந்தேகமே இல்லை

செல்ல நாய்க்குட்டி மனசு said...

govt: we will give a bicycle
student: no
govt: we will give a lap-top
student: no
govt: அப்போ என்ன தான் வேணும்
student: படிக்கிறதுக்கு முதல்ல புஸ்தகத்தை கொடுங்கப்பா

MANO நாஞ்சில் மனோ said...

நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும். //

இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு....