Thursday, June 2, 2011

எம்.எஸ்.ஆபீஸ் - கூகுள் குரோம் - எக்ஸல் :டிப்ஸ்

நான் கூகுள் குரோம் - 7 பிரவுசர் பயன்படுத்துகிறேன். ஆனால் கிராபிக்ஸ் தொடர்பானவற்றை பார்க்கும்போது, இயல்பான வேகத்தில் இயங்காதது போலத் தோன்றுகிறது. இதனை சரி செய்ய முடியுமா?

நமது கணிணிகளில் GPU - Graphics Processing Unit என்கிற சமாச்சாரம் ஒன்று உள்ளது. இதனுடன் சரியாக தொடர்பு இல்லாத எல்லா கிராபிக்ஸ் மென்பெர்ருள்களும்  தடுமாறும்.எனவே நமது கூகுள் குரோம் பிரவுசருக்கு சில கட்டளைகளை தர வேண்டும்.

  • டெஸ்க் டாப்பில் உள்ள, கூகுள் குரோம் ஷார்ட் கட்டின் மேல் right click செய்யுங்கள்.
  • ஒரு விண்டோ திறக்கும். அதில் Properties என்பதை தேர்ந்தெடுத்து, Shortcut டேபை கிளிக் செய்யுங்கள்.
  • Target டெக்ஸ் பெட்டியில் contentsக்குப் பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்துவிட்டு, '--'-enable-accelerated-compositing' என்பதை ஒரு எழுத்து கூட மாறாமல் டைப் செய்யுங்கள். பிறகு Apply->OK கொடுங்கள்.
இனி நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் முன்பிருந்த பிரச்சனைகள“ இன்றி தெரியும்.
நான் ஆபீஸ் 2010 பயன்படுத்துகிறேன். எனது நண்பரின் கணிணியில் உள்ள ஆபீஸ் 2010ல் மெனுக்கள் வேறு மாதிரி உள்ளன. மெனுக்களை நமது விருப்ப்படி மாற்றிக் கொள்ள முடியுமா?

தாராளமாக மாற்றிக் கொள்ள முடியும்.
Files ->Options->Customize Ribbon
இதே வரிசையில் கிளிக் செய்து கொண்டே வந்தால், மெனுக்களை மாற்றி அமைக்கும் விண்டோ திறக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு எக்ஸல்(Excel) ஃபைலின் குறிப்பிட்ட பகுதியை படமாக மாற்ற முடியுமா?தேவையான பகுதியை முதலில் மௌஸ் வைத்து தேர்ந்தேடுங்கள். 
பிறகு Shift கீயை அழுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து Edit->Copy Imageஐ தேர்வு செய்யுங்கள்.

1 comment:

Anonymous said...

sir, செல்போன் பற்றிய பதிவு ரொம்ப சரி ....

எனக்கு ஒரு சந்தேகம் ..
சவுதி அரேபியாவில் சில வெப்சைட் பிளாக் பண்ணி விடுவதால் பார்க்க முடிவதில்லை ....
இதற்கு ஏதும் தீர்வு இருந்தால் கூறுங்கள் ...நன்றி

ஈமெயில் : tamilnesa@yahoo.com