Thursday, April 8, 2010

நீ - நொடிகளில் புதைந்திருக்கும் யுகம்


நீ
இன்னும் வரையப்படாத வானவில்லாக
இன்னும் இசைக்கப்படாத வீணையாக
இன்னும் எழுதப்படாத கவிதையாக
இன்னும் கடக்கமுடியாத தொலைவாக
எனது நொடிகளில் யுகங்களாக புதைந்திருக்கிறாய்!


நீ
விதைகளில் ஒளிந்திருக்கும் விழுது
துளியில் ஓய்வெடுக்கும் கடல்
அகலில் பதுங்கியிருக்கும் சூரியன்

நீ
என்னுடன் வரமுடியாது.
ஆனால் . . .
நான் உன்னுடன் வருவேன்
மழையைத் தொடரும்
மண் வாசனையைப் போல!

6 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நீ
என்னுடன் வரமுடியாது.
ஆனால் . . .
நான் உன்னுடன் வருவேன்
மழையைத் தொடரும்
மண் வாசனையைப் போல!//

இந்த வரிகள் அழகு..!! :)

அண்ணா.. எப்பவும் போல் உங்கள் கவிதை அழகு..

ரசித்து படித்தேன்.. வாழ்த்துக்கள்.

Chitra said...

எனது நொடிகளில் யுகங்களாக புதைந்திருக்கிறாய்!

/.......சந்திரனின் ஒளியில் மலர்ந்திடும் அழகு முகம் கொண்ட கவிதை. - அருமை.

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நாள், இல்லை மாதங்கள் ஆயிற்றே என் வலைப்பூ பக்கம் பார்த்து:)! நலம்தானே?

ராமலக்ஷ்மி said...

//மழையைத் தொடரும்
மண் வாசனையைப் போல!//

மிக அருமை.

மனோ சாமிநாதன் said...

“மழையைத் தொடரும் மண் வாசனை போல”
மிக அழகான கவி நயம் மிக்க வரிகள்!!

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.