Saturday, May 30, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 2

வீட்டுவாடகை, கரண்ட்பில், மளிகை கடை என எக்கச்சக்க செலவு காத்திருக்கிறது. ஆனால் கையில் நயா பைசா இல்லை. சுமதி தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள். கணவன் சுரேஷ் கவலையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.

டிங் டாங்

வாசலில் காலிங் பெல் ஒலித்தது. சுமதி ஆடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டே கதவைத் திறந்தாள். வாசலில் ரமேஷ். கணவனின் ஸ்மார்ட்டான நண்பன்.

என்ன என்று அவள் விசாரிப்பதற்குள் அவள் கையில் 5000 ரூபாயை திணித்தான்.

இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு ஒரே ஒரு முத்தம் தருவியா?

ஒரு கணம் யோசித்து அடுத்த கணம் கொடுத்தாள்.

“இச்”

யாரது? கணவன் சுரேஷ் எழுந்து வரவும், ரமேஷ் விரைந்து மறைந்தான்.

உங்க பிரண்டு ரமேஷ் வந்திருந்தார், நீங்க தூங்கறீங்கன்னு சொன்னவுடனே போய்விட்டார்.

”அப்படியா, அவனுக்கு நான் 5000 ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பித் தர வர்றேன்னு சொல்லியிருந்தான். அதைப் பத்தி எதாவது சொன்னானா?”

ஜாலி அட்வைஸ்
கணவர்களுக்கு - மனைவிக்குத் தெரியாமல் யாருக்கும் கடன் தராதீர்கள்
மனைவிகளுக்கு - கணவனுக்குத் தெரியாமல் யாரிடமும் பணம் வாங்காதீர்கள்

(ஏதோ ஒரு வெப்சைட்டில் படித்த கதை)

Thursday, May 28, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 1

விடிந்தால் பரிட்சை. ஆனால் விடிய விடிய ஐ.பி.எல் பார்த்ததில் படிக்க முடியவில்லை. நேரத்தை வீணடித்த நண்பர்கள் நால்வரும் ஒரு திட்டம் போட்டார்கள். அதன்படி பரிட்சை நாளன்று, நால்வரும் சட்டையை அழுக்காக்கிக் கொண்டார்கள். கால்களில் சேற்றை வாரி நனைத்துக் கொண்டார்கள்.

பின்னர் அதே கோலத்துடன் தங்கள் பேராசிரியரை சந்தித்தார்கள்.
”சார், நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு காரில் சென்றிருந்தோம். ஆனால் திரும்பி வரும்போது, நடு இரவில் ஆளில்லாத ஒரு இடத்தில் டயர் வெடித்து கார் நின்று விட்டது. பரிட்சை இருப்பதால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டோம். அதனால்தான் இந்தக் கோலத்தில் இருக்கிறோம்” என்றார்கள்.

அவர்களின் நிலையைப் பார்த்து ஏமாந்த பேராசிரியர் ”உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதனால் மூன்று நாட்கள் கழித்து உங்களுக்கு மட்டும் தனியாக தேர்வை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

சரியாக மூன்றாவது நாள் அவர்கள் மீண்டும் பேராசிரியரை சந்தித்தார்கள். நீங்கள் ஸ்பெஷல் கேஸ் என்பதால் நால்வரும் தனித்தனி அறைகளில்தான் தேர்வெழுத வேண்டும் என்றார். அதன்படி நண்பர்கள் நால்வரும் தனித் தனி அறைகளில் அமர வைக்கப்பட்டார்கள். கேள்வித் தாள்களும் விநியோகிக்கப்பட்டன. இரண்டே இரண்டு கேள்விகள் தான்.

முதல் கேள்வி
உன் பெயர் என்ன ? ( 2 மதிப் பெண்கள்)

இரண்டாவது கேள்வி
அன்றைய இரவு காரின் எந்த டயர் வெடித்தது? (98 மதிப் பெண்கள்)
1. இடது முன் டயர்
2. இடது பின் டயர்
3. வலது முன் டயர்
4. வலது பின் டயர்

ஜாலி அட்வைஸ்
கூட்டு சேர்ந்து பொய் சொல்லுங்கள். ஆனால் தனியாக மாட்டாதீர்கள்

(இமெயிலில் வந்த கதை)