Friday, October 2, 2009

கலைஞர் டிவியில் கமல் தந்த டிப்ஸ்

காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக கலைஞர் டிவியில் கமலின் லைவ் Phone-in ஷோ.
பேசி வைத்துக் கொண்டு செய்வது போல இருக்கிறது என்று கமலே கிண்டல் செய்யும் அளவிற்கு, நிறைய வி.ஐ.பி போன்கள்.

யாருடைய கேள்விக்கோ பதில் சொல்லும்போது, ஹே ராம் போன்ற படங்களை திரையிடும்போது, அந்தப் படத்தில் இடம்பெறும் சரித்திர நிகழ்வுகள் பற்றிய டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றார் கமல். அருமையான வார்த்தைகள். எந்த சப்ஜெக்டாக இருந்தாலும், கொஞ்சம் ஆழமாக படமெடுக்கும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வார்த்தைகள்.

டெலிவிஷன் ஷோக்களில் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி ஒரு மினி அறிமுகம் அல்லது விவாதம் ஏற்பாடு செய்யலாம். அது போன்ற நிகழ்ச்சிகள் ஆடியன்ஸை தயார் செய்ய உதவும். நாம் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு கிடைக்கும். அதனால் அந்த படத்தை இரசிப்பது இலகுவாக இருக்கும். படம் இரசிகனுக்கு புரியாமல் போய்விடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படும்.

காந்தி அஹிம்சை வழியில் போராடி நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். இந்த அளவிற்குதான் மக்கள் Non-detailஆக சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார் கமல். உண்மைதான், நம்மில் பெரும்பாலோர் அவ்வளவுதான் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஹே ராமின் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கைபர் போலன் கனவாய், ஆரியர்கள், திராவிடர்கள், சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்த அரசியல் நிகழ்வுகள் . . . இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டு அதன் பின்னர் ஹே ராம் திரையிடப்பட்டால் மக்கள் அந்தப் படத்தை இன்னமும் மனதுக்கு நெருக்கமாக உணர்வார்கள்.

கலைஞர் டிவியிடம் ஹேராம் படத்திற்கான உரிமை தற்போது இருக்கின்றதாம். எதிர்காலத்தில் படம் ஒளிபரப்பப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ளது போல சப்ஜெக்ட் பற்றிய அடிப்படை அறிவு Knowledge base உருவாக்கிவிட்டு ஒளிபரப்பினால் மக்கள் எளிதில் இரசிக்க முடியும். இந்த அறிவுறுத்தல் அன்பே சிவம் போன்ற படங்களுக்கும் பொருந்தும் என்றார் கமல். நான் இந்த பட்டியலில் குணா, ஆளவந்தான் போன்ற படங்களையும் சேர்க்க விரும்புகின்றேன்.

திரையுலக வாழ்க்கையில் பொன் விழா கொண்டாடும் நேரத்தில், ஒரு ஆசிரியராக இருந்து கமல் பல கருத்துக்களை அடக்கத்தோடும் ஆதங்கத்தோடும் சொல்லிக் கொண்டு வருகின்றார். திரைத்துறையில் நுழையவிருக்கும் என்னைப் போன்றோருக்கு அவருடைய வார்த்தைகள் ஒரு வழிகாட்டி.

ISR VENTURES மற்றும் ”அவர்” குழுவினர் சார்பாக திரு.கமலஹாசன் அவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

8 comments:

ISR Selvakumar said...

வாழ்த்துகளுக்கு நன்றி கணேஷ் சந்திரா

மங்களூர் சிவா said...

நானும் அந்த நிகழ்ச்சிபார்த்தேன். நன்றாக இருந்தது.

மங்களூர் சிவா said...

/
கணேஷ் சந்திரா said...

Good luck with your movie.
/

ஓ நீங்க படம் எடுக்கறீங்களா?

வாழ்த்துக்கள்!

ISR Selvakumar said...

நன்றி சிவா!

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் சிவா!

Kolipaiyan said...

சகோதரரே, நீங்கள் எடுத்துள்ள இந்த பணிக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் படைப்பு அனைவரையும் சென்று சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ISR Selvakumar said...

”கோழி பையன்” - வாழ்த்துகளுக்கு நன்றி! உங்கள் பெயர் காரணத்தை சொல்ல முடியுமா?

குப்பன்.யாஹூ said...

ya its a nice idea. For Sivaji The Boss, film they did this idea (credit goes to Late Sujatha Rangarajan).

nice to see your blog, is your brother Ganesh (he acted in Prabu revathi YN Murali film , and had colleges etc, even he was in ADM state students wing secreatry