Tuesday, September 29, 2009

இனி பதிலடி தர மாட்டேன் - கருணாநிதி

ஜக்குபாய் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பின் வருமாறு பேசியிருந்தார்.

”காஞ்சீபுரம் விழாவில் நான் உணர்ச்சிமிக்க சொற்பொழிவு ஆற்றியதாக கேட்டவர்கள் எல்லாம் சொன்னார்கள். பேசும் போது நான் சொல்ல விட்டது- அதை இங்கே சொல்ல நினைப்பது இது வரையிலே என் மீது விழுந்த கணைகளுக்கு பதில் கணைகள் நான் அவர்கள் விடுத்த அதே கணைகளைப் போல் இதுவரையில் நான் விட்டிருந்தால் அதை நீங்கள் எல்லாம் மறந்து விடுங்கள்

நான் வாழ்வில் முக்கால் பகுதியை முடித்து விட்டு, அந்த முக்கால் பகுதியில் முத்தமிழுக்கு, இந்த முத்தமிழ் நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு, மூன்று புறமும் கடலால் சூழந்துள்ள இந்தியத் தீபகற்பத்திலே உள்ள மக்களுக்கும் என்ன செய்தேன், இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதிலே தான் நான் என்னுடைய கவனத்தைச் செலுத்துவேனே அல்லாமல், யார்-யார் என்ன சொன்னார்களோ, அதற்கு அளிக்க வேண்டிய விளக்கங்களை, அதற்குத் தர வேண்டிய மறுப்புகளை அதற்குத் தர வேண்டிய விவரங்களை இயக்கத்திலே இருக்கின்ற தொடர்புடைய மற்றவர்கள் சொல்லிக் கொள்ளட்டும்- அவர்கள் அந்தப்பணியை ஆற்றட்டும்.

நான் யாருக்கும் அவர்கள் தருகின்ற கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்பதை நேற்று காஞ்சீபுரத்திலே மனதிலே பதிய வைத்துக் கொண்டேன். அதை இன்று அண்ணா அறிவாலயத்திலே கலைஞர் அரங்கத்திலே வெளியிடுகின்றேன். இது தான் உறுதி, உறுதி, உறுதி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசியல் அல்ல.”

என்னைப் போன்ற அரை குறை கலைஞர் அபிமானிகளுக்கும், கலைஞர் வெறியர்களுக்கும், கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கும் கலைஞரிடம் மிகவும் பிடித்ததில் ஒன்று எது தெரியுமா? உடனுக்குடன் சளைக்காமல் தன்னை நோக்கி பாய்ந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி தருவது. ஆனால் சில நேரங்களில் அது தரம் தாழ்ந்து அவரது அபிமானிகளையே முகம் சுளிக்க வைக்கும். எதற்க்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்று எண்ண வைக்கும். சமீபத்திய உதாரணம் ஜெயலலிதாவை திருமதி.ஜெயலலிதா என்று விமர்சனம் செய்தது.

கலைஞருக்கு யார் உபதேசம் செய்தார்களோ? இனி அதுபோல் சரிக்கு சரி பதிலடி தர மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் அந்த வேலையை கட்சியின் மற்ற தலைவர்களும் தனது தொண்டர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டார். அதுதான் கவலையாக இருக்கிறது. இனி வெற்றிகொண்டான் போன்ற பேச்சாளர்களை கையில் பிடிக்க முடியாது.

ஆக (தரம் தாழந்தாலும்) பதிலடி நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம். இனி கலைஞர் பெயரில் இருக்காது.

6 comments:

பாலா said...

இருக்கமுடியுமா தலைவரால ????!!!!
பாடியவாயும் ஆடியாகாலும் ???????

ISR Selvakumar said...

உங்க சந்தேகம் சரிதான். 80 வருஷ பழக்கம். தலைவரால விடமுடியாதுன்னுதான் நினைக்கறேன்.

உடன்பிறப்பு said...

பகிர்வுக்கு நன்றி தல

Saamuraai said...

அரசியல் சாக்கடையிளுள்ளவர்களிடம் இருந்து வேறு எதை எதிர் பார்க்க முடியும்????

வெளியூர்க்காரன் said...

தலைவருக்கு அழகே அதான்யா...என்னங்க இப்டி சொல்லிபுட்டாரு..

மங்களூர் சிவா said...

/
பாலா said...

இருக்கமுடியுமா தலைவரால ????!!!!
பாடியவாயும் ஆடியாகாலும் ???????
/

அதானே
:)))