Tuesday, September 16, 2008

இது மாறன் சகோதரர்களின் வியூகமா? யூகமா?

மதுரை தினகரன் அலுவலகம் நொறுக்கப்பட்டபோது, அதை முதலில் கண்டித்தவர் கருணாநிதியின் மருமகன் செல்வம் (கலைஞரின் மகள் செல்வியின் கணவர்). மாறன் பிரதர்ஸ் தாத்தாவுக்கு எதிராக, அதாவது தனது மாமனாருக்கு எதிராக வாளை சுழற்றுகிற இன்றைய சூழலில் கூட அவர் மாறன் சகோதரர்களுடன்தான் இருக்கிறார். அதற்கு காரணம் செல்வத்திற்கு அழகிரியின் மேல் இருக்கிற கோபமா? அல்லது மாறன் பிரதர்ஸ் மேலிருக்கிற பாசமா என்பது ஒரு விடுகதை.

ஆனால் தினமலர் கார்ரடூன் விவகாரத்தில், சன் டிவியின் மேல் சட்டம் பாயத் தயாரான போது, கேடயமாக செல்வம் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். முடிந்தால் உன் மருமகனை தண்டித்துக்கொள் என்று மாறன் பிரதர்ஸ் தாத்தா கருணாநிதிக்கு செக் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். தனது மாமனார் கலைஞரை சங்கடத்தில் ஆழ்த்த, இது செல்வமே முன்வைத்த ஒரு யோசனை என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

நான் என்ன யோசிக்கிறேன் என்றால், இது அழகிரி விவகாரம் என்றால், கோபத்தில் செல்வம் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் தினமலர் விவகாரம் அவர் மூக்கை நுழைக்காமல் விட்டு விடக் கூடிய ஒரு பிரச்சனை. இதில் தப்பித்த நபர் என்றால் சன் நியுஸ் எடிட்டர் ராஜா. சங்கடத்தில் இருப்பவர் என்றால் கலைஞர். செல்வம் நிச்சயமாக எடிட்டர் ராஜாவுக்காக தன்னை பலிகடா ஆக்க முன்வந்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். அதே சமயம் கலைஞரை நோகடிக்க தன்னையே குற்றவாளியாக அறிவித்துக் கொள்ளும் அளவிற்கு கலைஞரின் மேல் செல்வத்திற்கு கோபமிருப்பதாகவும் தெரியவில்லை.

அழகிரியை எதிர்த்து மாறன் சகோதரர்களுக்காக சண்டை போட்டது ஓகே. ஆனால் கலைஞரை விட்டுவிட்டு சகோதரர்களுடன் இருப்பது ஏன்? தினமலர் விவகாரத்தில் தன்னையே சன் டிவி சார்பாக ஒரு குற்றவாளியாக முன் நிறுத்திக் கொள்ள காரணம் ஏன்?

இப்படிச் செய்வதால் கலைஞரை பின் வாங்க வைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டது, வியூகமா? யூகமா?

சன் டிவியை நிகழ்ச்சிகளை விட, சன் டிவி பற்றிய செய்திகள்தான் பரபரப்பாக இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு இன்னும் நிறைய அரசியல் பரபரப்புகள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உறுதி.

4 comments:

Anonymous said...

What is there to wonder about this?
It's obvious that Selvam is close blood relative to Maran bros than Kalaignar.

Selva said...

to find an answer one has to delve into their financial allaince more than blood relationship. ANy way paavam kalaignar. Enna paavam panninaro his last days are not peaceful because of his own family.

ISR Selvakumar said...

திரு. அனானி,
//Selvam is close blood relative to Maran bros than Kalaignar.//
அப்படியா?

ISR Selvakumar said...

செல்வா,
//to find an answer one has to delve into their financial allaince more than blood relationship//
தினகரனில் செல்வத்துக்கு பங்கு உண்டா? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

//ANy way paavam kalaignar. Enna paavam panninaro his last days are not peaceful because of his own family.//

இந்த விஷயத்தில், கலைஞர் பாவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நம்மை விட அவர் நன்கு அறிவார்.