Thursday, August 21, 2008

பொன்வண்டு, குசும்பன், கிரி மற்றும் பலருக்கு . . .

'கம்ப்யூட்டர்ல டவுட்டா?' அண்ணனைக் கேளு, என்று 15 வருடங்களாக என்னை நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நானும் MS DOS காலத்திலேருந்து எடுத்து விட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் ஒரு இன்ஸ்டன்ட் காபி பார்ட்டி. 'ஒக்கார்ந்து யோசிக்கிறது' எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இன்டர்நெட்டில் கிடைக்கிற Open Source மற்றும் Free Scripts இலவசங்களை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

//மங்களூர் சிவா said...
குசும்பா இது என் வலைப்பூ இல்லை. டெம்ப்ளேட் மட்டும் என்னுடையதை இவருக்கு குடுத்திருக்கேன்.//

என்னய்யா ஏதோ சைக்கிளை வாடகைக்கு கொடுத்து இருக்கிறேன் என்பது போல் சொல்ற!!! எனக்கு என்னமோ மறு அவதாரம் போல் இருக்கு:)))

இதைப் படித்துவிட்டு அடிக்கடி புன்னகைத்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதும் ஒரு புன்னகைக்கு இடையில்தான் இதை எழுதுகிறேன்.

இங்கு நான் ஒரு புது வரவு. பிளாகரில் என்னுடைய டெம்ப்ளட்டை எப்படி மாற்றுவது என்று தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் 'மங்களூர் சிவா' உதவிக்கு வந்தார். வேண்டுமானால் என்னுடைய டெம்பளட்டை upload செய்து கொள்ளுங்கள் என்றார். உடனே என்னுடைய இன்ஸ்டன்ட் புத்தி அதற்கு உடன்பட்டுவிட்டது. அவசரத்தில் அவருடைய போட்டோவை மாற்றத் தோன்றவில்லை.

அதற்குள் கமெண்டுகள், பதில் கமெண்டுகள் எல்லாவற்றிலும் 'மங்களூர் சிவாதான் r.selvakumar'ஆ என்று விசாரிப்புகள் துவங்கிவிட்டது. ஆனாலும் எல்லாம் நன்மைக்கே. இன்று மங்களூர் சிவாவை நான் என்னுடைய நண்பர் என்று சொல்லிக்க முடியும்.

விரைவில் இன்னும் சில நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆமாம், மங்களூர் சிவாவில் இருக்கிற 'ளூ' கீ போர்டில் எங்கே இருக்கிறது? நான் கட்-அண்டு பேஸ்ட் செய்து 'ளூ' வை சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு 'இன்ஸ்டன்ட் பார்ட்டி' என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

20 comments:

குசும்பன் said...

//படித்துவிட்டு அடிக்கடி புன்னகைத்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதும் ஒரு புன்னகைக்கு இடையில்தான் இதை எழுதுகிறேன்.//

சந்தோசமாக இருந்தா சரிதான்:)

குசும்பன் said...

//'மங்களூர் சிவா' உதவிக்கு வந்தார். வேண்டுமானால் என்னுடைய டெம்பளட்டை upload செய்து கொள்ளுங்கள் என்றார்.//

நிஜமாலுமே உதவிக்கு வந்தவர் என்றால் உங்களுக்கு புதிதாக அல்லவா செய்து கொடுத்து இருக்கவேண்டும்:)) அவர் ஏன் அவருடையதை கொடுக்கவேண்டும்!!!

ஏன்னா அவருக்கும் எப்படி மாற்றுவது என்பது தெரியாது:)))

குசும்பன் said...

//இன்று மங்களூர் சிவாவை நான் என்னுடைய நண்பர் என்று சொல்லிக்க முடியும்.//

Way to நாசமா நீ போறீயா தெரு எங்க இருக்கு என்று உங்களுக்கு தெரியுமா?:))

குசும்பன் said...

//விரைவில் இன்னும் சில நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.//

இதோ இன்னொருவனும் கிடைச்சாச்சு உங்களுக்கு:))

(கும்ம ஒரு புது இரை சிக்கபோவுதுடோடேய்:)

குசும்பன் said...

//'மங்களூர் சிவாதான் r.selvakumar'ஆ என்று விசாரிப்புகள் துவங்கிவிட்டது. //

வீணா போன பாழடைந்த பங்களாவுக்கு பெயிண்ட் அடிச்சா யாருதாங்க திரும்பி பார்க்க மாட்டாங்க:))))

குசும்பன் said...

//'ளூ' கீ போர்டில் எங்கே இருக்கிறது? //

press L+U (இரண்டுமே Caps)

குசும்பன் said...

மங்களூர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோல்

சிவா எனக்கு பேங் அங்கவுண்டில் எப்படி பணம் எடுப்பது, என்று தெரியாமல் முழுச்சிக்கிட்டு இருக்கேன் உங்க அக்கவுண்டையும், சீக்கிரட் கோட் நம்பரையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்

குசும்பன் said...

//அவசரத்தில் அவருடைய போட்டோவை மாற்றத் தோன்றவில்லை.//

நல்லது உங்களுக்கு திருஸ்டி கழிந்தது!!!

puduvaisiva said...

Dear Selva
"நான் ஒரு 'இன்ஸ்டன்ட் பார்ட்டி' என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்."

I am go to Birthday Party :-))

Me the Ist??

Puduvai siva

ISR Selvakumar said...

புதுவை சிவா,
என்னைக்காவது ஒரு நாள் புதுவையிலேயே ஒரு பார்ட்டி வைச்சுக்கலாம்.

கிரி said...

//ஆமாம், மங்களூர் சிவாவில் இருக்கிற 'ளூ' கீ போர்டில் எங்கே இருக்கிறது? நான் கட்-அண்டு பேஸ்ட் செய்து 'ளூ' வை சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.//

ஹா ஹா ஹா

உதவி தேவை என்றால் கூறுங்கள்

ISR Selvakumar said...

கிரி உங்கள் உதவி தேவை.
'ளூ' எங்கே இருக்கிறது?

கிரி said...

நான் தங்கிலிஷ் பார்ட்டி ..அதனால எனக்கு அந்த பிரச்சனை இல்லை :-)

http://www.google.com/transliterate/indic/Tamil

ஜோசப் பால்ராஜ் said...

caps L + caps U = ளூ

மங்களூர் சிவா said...

L+U = ளூ

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்பத்தான் ஒருத்தரிடம் விசாரிச்சுட்டு வந்தேன்.. சிவா படம் போட்டு யாரு இந்த செல்வான்னு?
ஓகே...ல் -L ள் shift L இது தான் கீமேன் யுனிகோட் கீபோர்ட்ல..

சரவணகுமரன் said...

//நான் கட்-அண்டு பேஸ்ட் செய்து 'ளூ' வை சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.//

கஷ்டம் தான்... :-)

ISR Selvakumar said...

//
சிவா எனக்கு பேங் அங்கவுண்டில் எப்படி பணம் எடுப்பது, என்று தெரியாமல் முழுச்சிக்கிட்டு இருக்கேன் உங்க அக்கவுண்டையும், சீக்கிரட் கோட் நம்பரையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்
//

ஹா..ஹா..ஹா...
குசும்பனின் பெயருக்கு ஏற்ற குசும்பு

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

மங்களூர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோல்

சிவா எனக்கு பேங் அங்கவுண்டில் எப்படி பணம் எடுப்பது, என்று தெரியாமல் முழுச்சிக்கிட்டு இருக்கேன் உங்க அக்கவுண்டையும், சீக்கிரட் கோட் நம்பரையும் கொடுத்தால் வசதியாக இருக்கும்
/

குசும்பா கோவில் உண்டியலில் போட வைத்திருக்கும் ஐம்பது பைசாவை எப்படியாவது உன் துபாய் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறேன்.

:)))))

மங்களூர் சிவா said...

@குசும்பன்

இல்லை பாஸ்வேர்ட்தான் வேண்டும் என அடம்பிடித்தால்

*************

என்ஜாய்
:))))