Saturday, August 30, 2008

'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு . . .

சில மாதங்களுக்கு முன்னால் 'டயல் ஜெயா டிவி' என்கிற நேரலை நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிற வாய்ப்பு கிடைத்தது. நவீன கல்வி முறையான 'செயல் வழிக் கல்வி(Activity Based Learning) பற்றி தொகுப்பாளருடன் ஒரு உரையாடல், இடையிடையே நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கு பதில். இதுதான் நிகழ்ச்சி.

தொலை பேசியில் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலோர், இளம் இல்லத்தரசிகள் தான்.
'என் பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான்',
'என் பொண்ணு மேத்ஸ்ல வீக்கா இருக்கா',
'பசங்களோட கையெழுத்தை எப்படி இம்ப்ரூவ் பண்றது?'
இப்படி ஒரு வகை புலம்பல்

'என் தங்கையோட பொண்ணை விட என் பையன் மோசமா இருக்கான்'
'முதல் பையன் அளவுக்கு இரண்டாது பையன் சாப்பிட மாட்டேங்கிறான்'
'ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும். ஏதாவது டியூஷன் இருக்கா?'
'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு எல்லாத்துக்கும் ஃபீஸ் கட்டி அனுப்பறேன். இதைத் தவிர டெய்லி டியூஷன் இருக்கு. ஆனா எதுலயுமே பிரில்லியண்டா இல்ல. என்ன பண்ணலாம்?'
இது இன்னொரு வகையான புலம்பல்

யாருமே தன் குழந்தையைப் பற்றி சந்தோஷப் படவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே குற்றப்பத்திரிகை வாசித்தார்கள். கணக்குல 100 எடுத்தா பத்தாது, இங்கிலீஷ்ல 95தான் வருது என்று வருத்தப்பட்டார்கள். எல்லா பெற்றோருமே பக்கத்துவீட்டு குழந்தையை விட தன் குழந்தை மக்கு என்று வருத்தப்பட்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின் ஒரு பெண்மணி என் அலுவகத்திற்கு ஃபோன் செய்தார்.
"சார் என் பையனுக்கு மெமரி பத்தல சார். எதிர் வீட்டுப் பொண்ணு டான் டான்னு எதைக் கேட்டாலும் பதில் சொல்றா? என் பையன் முழிக்கிறான். எதிர் வீட்டுப் பொண்ணு ரெட், க்ரீன், ப்ளுன்னு எல்லா கலரையும் அழகா ஐடன்டிஃபை பண்றா. ஆனா என் பையன் எல்லாத்தையும் தப்புத்தப்பா சொல்றான். நம்பர்ஸ் எதுவுமே சொல்ல வரல. ஏபிசிடி கூட யோசிச்சு யோசிச்சுதான் சொல்றான். ரைம்ஸ் எல்லாம் தப்பு"

"அப்படியா? வயசு என்னம்மா ஆச்சு?"
"29 சார்"
"உங்க வயசை கேட்கலம்மா. உங்க பையன் வயசு என்ன?"
"இப்ப தான் ஒன்னரை வயசாகுது டாக்டர்"

நான் அதிர்ச்சியில் ஃபோனை வைத்துவிட்டேன்.

7 comments:

Anonymous said...

உங்க பதிவுகள் .... பிச்சு உதறுது ... வலையுலக எதிகால சூப்பர் ஸ்டார் நீங்க தான்

TBCD said...

சமீப காலத்தில் வந்த பதிவுகளில் தொடர்ச்சியாக அயர்ச்சி இல்லாமல் படிக்கக்கூடியதாக உங்க பதிவு இருக்கு...

வாழ்த்துக்கள்....

TBCD said...

சமீப காலத்தில் வந்த பதிவுகளில் தொடர்ச்சியாக அயர்ச்சி இல்லாமல் படிக்கக்கூடியதாக உங்க பதிவு இருக்கு...

வாழ்த்துக்கள்....

கிரி said...

//"அப்படியா? வயசு என்னம்மா ஆச்சு?"
"29 சார்"
"உங்க வயசை கேட்கலம்மா. உங்க பையன் வயசு என்ன?"
"இப்ப தான் ஒன்னரை வயசாகுது டாக்டர்"
நான் அதிர்ச்சியில் ஃபோனை வைத்துவிட்டேன்.//

ஹா ஹா ஹா ஹா டாப்பு

Anonymous said...

//'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு எல்லாத்துக்கும் ஃபீஸ் கட்டி அனுப்பறேன். இதைத் தவிர டெய்லி டியூஷன் இருக்கு. ஆனா எதுலயுமே பிரில்லியண்டா இல்ல. என்ன பண்ணலாம்?'//

குழந்தையப் பெத்தாங்களா இல்ல மெஷினையா?

என்னைக்குத்தான் இந்த மோகம் குறையுமோ?

மங்களூர் சிவா said...

/
"சார் என் பையனுக்கு மெமரி பத்தல சார். எதிர் வீட்டுப் பொண்ணு டான் டான்னு எதைக் கேட்டாலும் பதில் சொல்றா? என் பையன் முழிக்கிறான். எதிர் வீட்டுப் பொண்ணு ரெட், க்ரீன், ப்ளுன்னு எல்லா கலரையும் அழகா ஐடன்டிஃபை பண்றா. ஆனா என் பையன் எல்லாத்தையும் தப்புத்தப்பா சொல்றான். நம்பர்ஸ் எதுவுமே சொல்ல வரல. ஏபிசிடி கூட யோசிச்சு யோசிச்சுதான் சொல்றான். ரைம்ஸ் எல்லாம் தப்பு"

"அப்படியா? வயசு என்னம்மா ஆச்சு?"
"29 சார்"
"உங்க வயசை கேட்கலம்மா. உங்க பையன் வயசு என்ன?"
"இப்ப தான் ஒன்னரை வயசாகுது டாக்டர்"

/

ROTFL
:)))))))))))))

ராமலக்ஷ்மி said...

//நான் அதிர்ச்சியில் ஃபோனை வைத்துவிட்டேன்.//

ஆமாம், வேறென்ன செய்ய முடியும்?
குழந்தைகளை எப்போது குழந்தைகளாகப் பார்க்கப் போகிறார்கள் இவர்கள். வெளியில்தான் அவர்களுக்குச் சுமை அதிகரித்து விட்டது என்றால் வீட்டிலும் இப்படி. இது சம்பந்தமாக வேடிக்கையாய் சொல்வது போல் நான் எழுதிய "காலத்தின் கட்டாயம்" கவிதையை நேரம் கிடைத்தால் பாருங்கள்:
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_9078.html

//யாருமே தன் குழந்தையைப் பற்றி சந்தோஷப் படவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே குற்றப்பத்திரிகை வாசித்தார்கள். கணக்குல 100 எடுத்தா பத்தாது, இங்கிலீஷ்ல 95தான் வருது என்று வருத்தப்பட்டார்கள். எல்லா பெற்றோருமே பக்கத்துவீட்டு குழந்தையை விட தன் குழந்தை மக்கு என்று வருத்தப்பட்டார்கள்.//

இதே போல எனது இன்றைய பதிவான
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post_20.html
"வேண்டுவது தளமா இல்லை சோர்வைத் தரும் களமா?"வில் ரம்யா ரமணி அவர்கள் சொன்ன கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்:
//சில பெற்றோர் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்னோ, அவர்களின் திறமைகளோ.. ஒரு "Status Symbol" போல கருதுவது மாறினாலே..பிள்ளைகளின் இயல்பான திறமைகள் வெளிபடும்னு நான் நினைக்கிறேன்//